Skip to content

‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’

2024 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு

அனுமதி இலவசம் பணம் வசூலிக்கப்படாது

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

வெள்ளிக்கிழமை: சுவிசேஷ புத்தகங்களில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியிருக்கும் நல்ல செய்தி துல்லியமானது என்பதற்கு ஆதாரங்களைப் பார்ப்பீர்கள். அந்த பைபிள் பதிவுகள் இன்று நம் காலத்துக்கு எப்படி உதவும் என்றும் பார்ப்பீர்கள்.

சனிக்கிழமை: இயேசுவின் பிறப்பைப் பற்றியும் அவருடைய சிறு வயது வாழ்க்கையைப் பற்றியும் என்னென்ன தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன, அவையெல்லாம் உண்மையிலேயே நிறைவேறியதா?

ஞாயிற்றுக்கிழமை: உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போனாலும் லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அதற்கான காரணத்தை, “கெட்ட செய்தியைக் கேட்டு நாங்கள் பயப்படுவதில்லை!” என்ற பைபிள் பேச்சில் கேட்பீர்கள்.

வீடியோ நாடகம்

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!: தொடர் 1

உலகத்தின் உண்மையான ஒளி

இயேசு அற்புதமான விதத்தில் பிறந்தார். அவருடைய சிறு வயதில் நடந்த பல முக்கியமான விஷயங்களில் இது வெறும் ஆரம்பம்தான். கொடூரமான ஒரு ராஜா, இயேசுவைக் கொல்வதற்காகத் தேடினான். ஆனால் இயேசுவுடைய பெற்றோர் அவரை எகிப்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். பிறகு, அவருடைய காலத்தில் வாழ்ந்த சில பெரிய போதகர்கள் அவரைப் பார்த்து அசந்துபோகும் விதத்தில் அவர் நடந்துகொண்டார். இதைப் பற்றியும் இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றியும் வெள்ளி மற்றும் சனி அன்று காட்டப்படும் இரண்டு பாக வீடியோ தொடரில் பார்ப்பீர்கள்.

இந்த வருஷ மாநாட்டைப் பற்றி இந்த வீடியோக்களில் பாருங்கள்

எங்கள் மாநாடுகள் எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

2024 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு: ‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’

இந்த வருஷ மாநாட்டைப் பற்றி இந்த வீடியோவில் பாருங்கள்.

வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!

இயேசு அற்புதமான விதத்தில் பிறந்ததைப் பற்றி நிறையப் பேர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பும் பின்பும் என்னவெல்லாம் நடந்தது?