Skip to content

கடவுளுடைய பெயர் இயேசுவா?

கடவுளுடைய பெயர் இயேசுவா?

பைபிள் தரும் பதில்

 இயேசு தன்னை “கடவுளுடைய மகன்” என்றே குறிப்பிட்டார். (யோவான் 10:36; 11:4) சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஒருபோதும் தன்னைக் குறிப்பிடவில்லை.

 அதுமட்டுமல்ல, இயேசுவே கடவுளிடம் ஜெபம் செய்தார். (மத்தேயு 26:39) அதோடு, எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்று தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று சொன்னார்.—மத்தேயு 6:9.

 பூர்வகாலத்தில் எழுதப்பட்ட வசனத்தை இயேசு மேற்கோள் காட்டியபோது கடவுளுடைய பெயரை வெளிப்படுத்தினார்; “இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா” என்று அவர் சொன்னார்.—மாற்கு 12:29; உபாகமம் 6:4.