Skip to content

சூதாடுவது பாவமா?

சூதாடுவது பாவமா?

பைபிள் தரும் பதில்

 சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விலாவாரியாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், அதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டம் என்னவென்பதை பைபிள் நியமங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.—எபேசியர் 5:17. a

  •   சூதாட்டத்துக்குத் தீனிபோடுவது பேராசை; இதைக் கடவுள் வெறுக்கிறார். (1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:3, 5) மற்றவர்களுடைய நஷ்டத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் சூதாடிகளுக்கு இருக்கிறது. அப்படி மற்றவர்களுடைய பணம், பொருளுக்காகப் பேராசைப்படுவதை பைபிள் கண்டனம் செய்கிறது.—யாத்திராகமம் 20:17; ரோமர் 7:7; 13:9, 10.

  •   சூதாடுவது (சிறு தொகைக்காகக்கூட!) பண ஆசையைத் தூண்டிவிடும், நாசகரமான விளைவுகளைச் சந்திக்க வைத்துவிடும்.—1 தீமோத்தேயு 6:9, 10.

  •   சூதாட்டக்காரர்கள் பெரும்பாலும் மூடப்பழக்கவழக்கங்களை அல்லது அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட நம்பிக்கைகள் உண்மை வணக்கத்தோடு ஒத்துவராத சிலை வழிபாடுபோல் இருப்பதாகக் கடவுள் கருதுகிறார்.—ஏசாயா 65:11.

  •   உழைக்காமலேயே ஊதியம் பெற வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடுவதற்குப் பதிலாக, கடினமாய் உழைக்க வேண்டும் என்றே பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (பிரசங்கி 2:24; எபேசியர் 4:28) பைபிள் தரும் இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்கிறவர்கள் “தாங்களே உழைத்து” சம்பாதிக்கிற உணவைச் சாப்பிட முடியும்.—2 தெசலோனிக்கேயர் 3:10, 12.

  •   சூதாட்டம் ஆபத்தான போட்டி மனப்பான்மையை வளர்த்துவிடும்; இப்படிப்பட்ட மனப்பான்மையை பைபிள் கண்டனம் செய்கிறது.—கலாத்தியர் 5:26.

a இயேசுவின் உடையை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காக ரோமப் படைவீரர்கள் குலுக்கல் போட்டார்கள், அதாவது ‘சீட்டுப்போட்டார்கள்,’ என்று பைபிள் சொல்கிறது; பைபிள் பதிவுகளில் சூதாட்டத்தைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிற பதிவு இது மட்டும்தான்.—மத்தேயு 27:35, தமிழ் O.V.; யோவான் 19:23, 24, தமிழ் O.V.