Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு புன்னகை போதுமே!

ஒரு புன்னகை போதுமே!

டவுன்லோட்:

  1. 1.‏ அழகாய் கதை சொன்னாலும்,

    கவிதை பாடினாலும்,

    ஓவியங்கள் தீட்டினாலும்,

    உள்ளங்கள் ஈர்க்குமா?

    கனிவான வார்த்தையாலே

    மனதைத் தொடலாமே.

    ஆனாலும், தேவையே ஓர் புன்னகைதானே!

    (பல்லவி)

    சிரித்தாலே சோகங்கள் தீருமே!

    சிரித்தாலே மனம் திறக்குமே!

    வேண்டியே கேட்டால் உதவி செய்வார்.

    தேவைதானே ஓர் புன்னகை பூவே!

  2. 2.‏ அன்பின் வாசமில்லாத மக்களின் நடுவிலே,

    கொஞ்சமும் பாசமில்லாத

    மக்கள் நம்மை சுற்றியே.

    நொந்துபோன நெஞ்சங்களை

    தினமும் பார்க்கின்றோமே.

    நல்ல செய்தி சொல்லியே நாம்

    மனம்தான் தேற்றிடுவோம்.

    (பல்லவி)

    சிரித்தாலே சோகங்கள் தீருமே!

    சிரித்தாலே மனம் திறக்குமே!

    வேண்டியே கேட்டால் உதவி செய்வார்.

    தேவைதானே ஓர் புன்னகை பூவே!

  3. 3.‏ நாம் சொல்லும் நற்செய்தியை கேட்காமல் போலாமே!

    நம்பிக்கையின் செய்தியை ஒதுக்கிவிடலாமே!

    பாறை போன்ற நெஞ்சங்களில் விதைகள் முளைக்காதே!

    கனிவாய் சிந்தும் புன்னகை துளிர்க்க வைக்குமே!

    (பல்லவி)

    சிரித்தாலே சோகங்கள் தீருமே!

    சிரித்தாலே மனம் திறக்குமே!

    வேண்டியே கேட்டால் உதவி செய்வார்.

    தேவைதானே ஓர் புன்னகை பூவே!