Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா?

தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா?

உலகத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. முன்பைவிட இப்போது அவை உங்களை அதிகமாகப் பாதிப்பதுபோல் உங்களுக்குத் தோன்றுகிறதா? இந்தப் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று உங்களைப் பாதித்திருக்கிறதா?

  • போர்கள்

  • கொள்ளை நோய்கள்

  • இயற்கைப் பேரழிவுகள்

  • வறுமை

  • பாகுபாடு

  • குற்றச்செயல்கள்

வாழ்க்கையில் திடீரென்று பயங்கரமான ஒரு சம்பவம் நடக்கும்போது சிலர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகிறார்கள்; நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். வேறு சிலர், எந்த உணர்ச்சியையும் காட்ட முடியாமல் உறைந்துபோய் விடுகிறார்கள். இந்த மாதிரி உணர்ச்சிகள் இருந்துகொண்டே இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

தத்தளிக்கும் இந்த உலகத்தில், நமக்கு நெருக்கமானவர்களையும் நம் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் சந்தோஷத்தையும் பாதுகாக்க ஏதாவது செய்தே ஆகவேண்டும்!

இந்த உலகத்தில் இருக்கிற பிரச்சினைகள் நம்மை ரொம்பவே பாதித்துவிடாதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். எப்படி?