Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 2 2018 | குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்

குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்

இன்றைய குடும்பங்களில் ஏற்படுகிற பிரச்சினைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு . . .

  • அமெரிக்காவில், 50 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை 1990-லிருந்து 2015-க்குள் இரண்டு மடங்காகவும், 65 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை மூன்று மடங்காகவும் உயர்ந்தது.

  • பிள்ளைகளை எப்போதும் புகழ வேண்டும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்; வேறு சிலரோ, பிள்ளைகளின் நன்மைக்காக அவர்களிடம் கறாராக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால், பெற்றோர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

  • இளம் பிள்ளைகள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வது இல்லை.

ஆனால், சில குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன; அப்படியென்றால் . . .

  • திருமண வாழ்க்கை, செழிப்பானதாகவும் நிலையானதாகவும் இருக்க முடியும்.

  • பிள்ளைகளை அன்போடு கண்டித்து வளர்ப்பதற்கு பெற்றோர்களால் கற்றுக்கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை இளம் பிள்ளைகளால் இப்போதே வளர்த்துக்கொள்ள முடியும்.

எப்படி? விழித்தெழு! பத்திரிகையின் இந்த இதழ், குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான 12 ரகசியங்களைப் பற்றிப் பேசுகிறது.

1: கடமையுணர்ச்சி

தம்பதிகள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு உதவுகிற மூன்று அருமையான டிப்ஸைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

2: கூட்டுமுயற்சி

நீங்களும் உங்கள் துணையும் தனித்தனி தீவுகளாக இருக்கிறீர்களா?

3: மதிப்புமரியாதை

உங்கள் மணத்துணைக்கு மரியாதை காட்ட எந்தெந்த வார்த்தைகளும் செயல்களும் ரொம்பவே முக்கியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

4: மன்னிப்பு

உங்கள் துணையின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்?

5: பேச்சுத்தொடர்பு

உங்கள் பிள்ளைகளோடு நெருங்கியிருக்க உதவுகிற மூன்று முக்கியமான படிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

6: கண்டிப்பு

கண்டிப்பு ஒரு பிள்ளையின் தன்மானத்தைக் குலைத்துப்போடுமா?

7: ஒழுக்கநெறிகள்

எப்படிப்பட்ட ஒழுக்கநெறிகளை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும்?

8: முன்மாதிரி

நீங்கள் சொன்னதைச் செய்கிறவராக இருந்தால்தான், நீங்கள் சொன்னதற்கு உங்கள் பிள்ளைகள் கீழ்ப்படிவார்கள்.

9: அடையாளம்

இளம் பிள்ளைகள் தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

10: நம்பகத்தன்மை

நீங்கள் முதிர்ச்சியுள்ள நபராக ஆக வேண்டுமென்றால், உங்கள் பெற்றோருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பது ரொம்பவே முக்கியம்.

11: கடின உழைப்பு

இளைஞர்களே, கடினமாக வேலை செய்ய இப்போதே கற்றுக்கொண்டீர்கள் என்றால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.

12: குறிக்கோள்கள்

குறிக்கோள்களை அடையும்போது உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும், நட்பு பலப்படும், சந்தோஷம் பூத்துக்குலுங்கும்.

குடும்பத்துக்குக் கூடுதலான உதவி

வெற்றிகரமான மணவாழ்க்கைக்கும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கும் பைபிள் ஆலோசனைகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.