Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | சோதனைகள் இடியாய் தாக்கும்போது...

குடும்பத்தாரை இழக்கும்போது...

குடும்பத்தாரை இழக்கும்போது...

ரொனால்டோ என்பவர் பிரேசிலில் வாழ்கிறார். ஒரு கார் விபத்தில் அவருடைய குடும்பத்தார் ஐந்து பேர் இறந்துபோனார்கள். அதில் அவருடைய அப்பா-அம்மாவும் இறந்துவிட்டார்கள். இவர் மட்டும் உயிர் பிழைத்தார். ரொனால்டோ சொல்கிறார்: “நான் ரெண்டு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். அப்புறம்தான் அவங்க செத்துபோன விஷயத்த எனக்கு சொன்னாங்க.”

எல்லாருமே இறந்துட்டாங்கன்ற விஷயத்தை என்னால ஏத்துக்க முடியல. ஆனா, அது உண்மைனு தெரிஞ்சப்போ நான் அப்படியே இடிஞ்சி போயிட்டேன்; அவங்க இல்லாம எனக்கு வாழவே பிடிக்கல. பல மாசத்துக்கு அவங்கள நினைச்சு தினமும் அழுதேன். நானே வண்டி ஓட்டியிருந்தா இப்படி நடந்திருக்காதுனு நினைச்சேன்.”

“இது நடந்து 16 வருஷம் ஆகுது. இப்பதான், அந்த சோகத்துலயிருந்து வெளில வந்திருக்கேன். இருந்தாலும், அவங்க இல்லாத குறைய யாராலையும் தீர்க்க முடியாது.”

எப்படிச் சமாளிப்பது?

அழ வேண்டுமென்று தோன்றினால் அழுதுவிடுங்கள். “அழ ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது (பிரசங்கி 3:1, 4) ரொனால்டோ சொல்கிறார்: “எனக்கு எப்பெல்லாம் அழணும்னு தோனுதோ அப்பெல்லாம் அழுதுடுவேன். அப்போ என்னோட பாரம் குறைஞ்ச மாதிரி ஆயிடும். அழுகைய கட்டுப்படுத்துறதுல எந்த பிரயோஜனமும் இல்லை.” ஆனால், சிலர் இயல்பாகவே அழ மாட்டார்கள். அதற்காக, அவர்கள் கஷ்டப்பட்டு அழுதே ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.

எப்போதும் தனியாகவே இருக்க வேண்டுமென்று நினைக்காதீர்கள். (நீதிமொழிகள் 18:1) ரொனால்டோ சொல்கிறார்: “யாரோடும் ஒட்டாம தனியா இருக்கலாம்னு தோனும். ஆனா, நான் அப்படி இருக்கல. என்னை பார்க்க வந்தவங்ககிட்ட நான் நல்லா பேசினேன். என் மனைவிகிட்டயும் நண்பர்கள்கிட்டயும் மனம்விட்டு பேசினேன்.”

மனதைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் யாராவது பேசினால் அமைதியாக இருங்கள். “நடந்ததெல்லாம் நல்லதுக்குத்தான்” என்று சிலர் சொல்லலாம். “ஆறுதலுக்காக சிலர் அந்த மாதிரி சொல்வாங்க. ஆனா அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்கிறார் ரொனால்டோ. உங்கள் மனதை கஷ்டப்படுத்தும் வார்த்தைகளையே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்; “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே” என்று பைபிள் சொல்லும் ஆலோசனையை மறந்துவிடாதீர்கள்.—பிரசங்கி 7:21.

இறந்தவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ரொனால்டோ சொல்கிறார்: “இறந்தவங்க எந்த வேதனையையும் அனுபவிக்கலன்னு பிரசங்கி 9:5 சொல்லுது. இது என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. அதுமட்டுமில்ல, ரொம்ப சீக்கிரத்துல அவங்கெல்லாம் திரும்பவும் உயிரோட வர போறாங்கன்னும் பைபிள் சொல்லுது. அதனால அவங்கெல்லாம் எங்கேயோ தூரமா ஒரு இடத்துக்கு போயிருக்காங்க, திரும்பவும் வந்துடுவாங்கன்னு நினைச்சிப்பேன்.”—அப்போஸ்தலர் 24:15.

உங்களுக்குத் தெரியுமா? சீக்கிரத்தில், “என்றுமே இல்லாதவாறு சாவை [கடவுள்] ஒழித்து விடுவார்” என்று பைபிள் சொல்கிறது. *ஏசாயா 25:8, பொது மொழிபெயர்ப்பு. ▪ (g14-E 07)

^ பாரா. 11 இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 7-ஐ பாருங்கள்.