Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

கடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்

கடவுள் நமக்குச் சொல்ல விரும்பும் செய்தி பைபிளில் இருக்கிறது. வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறலாம், கடவுளுக்குப் பிரியமாக எப்படி வாழலாம் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும் பதில் தருகிறது:

  1. 1. கடவுள் யார்?

  2. 2. கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

  3. 3. பைபிளை எழுதியது யார்?

  4. 4. அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா?

  5. 5. பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன?

  6. 6. மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

  7. 7. நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

  8. 8. நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள் காரணமா?

  9. 9. மனிதர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

  10. 10. நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  11. 11. ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது?

  12. 12. இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?

  13. 13. வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  14. 14. பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி?

  15. 15. சந்தோஷமாக வாழ்வது எப்படி?

  16. 16. கவலைகளைச் சமாளிப்பது எப்படி?

  17. 17. குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது?

  18. 18. கடவுளுடைய நண்பராவது எப்படி?

  19. 19. பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது?

  20. 20. பைபிள் படிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம்?

பைபிள் வசனங்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

பைபிளில் 66 சிறு புத்தகங்கள் இருக்கின்றன. எபிரெய-அரமேயிக் வேதாகமம் (“பழைய ஏற்பாடு”) என்றும், கிரேக்க வேதாகமம் (“புதிய ஏற்பாடு”) என்றும் இரண்டு பகுதிகளாக பைபிள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பைபிள் புத்தகத்திலுமே அதிகாரங்களும் வசனங்களும் இருக்கின்றன. வசனங்கள் குறிப்பிடப்படும்போது, புத்தகத்தின் பெயருக்கு அடுத்து வருகிற எண் அதிகாரத்தைக் குறிக்கிறது, அதற்கு அடுத்து வருகிற எண் வசனத்தைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, ஆதியாகமம் 1:1 என்பது ஆதியாகமம் புத்தகத்தில் அதிகாரம் 1, வசனம் 1-ஐக் குறிக்கிறது.