சங்கீதம் 139:1-24

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் பாடல். 139  யெகோவாவே, நீங்கள் என்னை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்.என்னைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+   நான் எப்போது உட்காருகிறேன், எப்போது எழுந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.+ நீங்கள் தூரத்தில் இருந்தாலும் என் யோசனைகள்கூட உங்களுக்குத் தெரியும்.+   நான் பயணம் செய்யும்போதும் படுக்கும்போதும் என்னைக் கவனிக்கிறீர்கள்.என் வழிகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+   யெகோவாவே, என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்கு முன்பே,நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.+   எனக்கு முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும், என்னைச் சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள்.உங்கள் கையை என்மேல் வைக்கிறீர்கள்.   நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+   உங்களுடைய சக்திக்கு மறைவாக நான் எங்கே தப்பித்துப் போக முடியும்?உங்கள் பார்வைக்கு மறைவாக எங்கே ஓடி ஒளிய முடியும்?+   நான் வானத்துக்கு ஏறினாலும் நீங்கள் அங்கே இருப்பீர்கள்.நான் கல்லறையில் படுக்கை போட்டாலும் நீங்கள் அங்கே இருப்பீர்கள்.+   நான் விடியலின் சிறகுகளோடு பறந்துபோய்,தொலைதூரத்திலுள்ள கடலருகே தங்கினால்கூட, 10  அங்கேயும் உங்கள் கை எனக்கு வழிகாட்டும்.உங்கள் வலது கை என்னைத் தாங்கிப் பிடிக்கும்.+ 11  “இருட்டு கண்டிப்பாக என்னை மூடிக்கொள்ளும்!” என்று நான் சொல்லும்போது, என்னைச் சூழ்ந்திருக்கிற இருட்டு வெளிச்சமாக மாறும். 12  இருட்டுகூட உங்களுக்கு இருட்டாக இருக்காது.இரவுகூட உங்களுக்குப் பகல்போல் பிரகாசமாக இருக்கும்.+உங்களைப் பொறுத்தவரை, இருட்டும் வெளிச்சமும் ஒன்றுதான்.+ 13  நீங்கள்தான் என் சிறுநீரகங்களை உருவாக்கினீர்கள்.என் தாயின் கர்ப்பத்தில் என்னைத் திரைபோட்டு மறைத்தீர்கள்.*+ 14  பிரமிக்க வைக்கும் விதத்தில் என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்!+ அதனால் உங்களைப் புகழ்கிறேன்.உங்கள் செயல்கள் எல்லாமே அற்புதமானவை.+ அது எனக்கு மிக நன்றாகத் தெரியும். 15  நான் மறைவான இடத்தில் உண்டாக்கப்பட்டபோது,என் தாயின் கர்ப்பத்தில்* உருவாக்கப்பட்டபோது,என் எலும்புகள் உங்கள் கண்களுக்கு மறைவாக இருக்கவில்லை.+ 16  நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன.என்னுடைய உறுப்புகள் எதுவும் உருவாவதற்கு முன்பே,அவை ஒவ்வொன்றைப் பற்றியும், அவை உருவாகும் நாட்களைப் பற்றியும்உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. 17  கடவுளே, உங்களுடைய யோசனைகள் எனக்கு எவ்வளவு அருமையானவை!+ அவை கணக்கிலேயே அடங்காதவை!+ 18  நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால், அவை கடற்கரை மணலைவிட அதிகமாக இருக்கும்.+ நான் கண்விழிக்கும்போதும் உங்களோடுதான் இருக்கிறேன்.*+ 19  கடவுளே, நீங்கள் பொல்லாதவர்களை வெட்டி வீழ்த்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+ அப்போது, வன்முறைக்காரர்கள்* என்னைவிட்டுப் போய்விடுவார்கள். 20  அவர்கள் கெட்ட எண்ணத்தோடு உங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.அவர்கள் உங்களுடைய எதிரிகள்; உங்கள் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறார்கள்.+ 21  யெகோவாவே, உங்களை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காமல் இருப்பேனா?+உங்களை எதிர்க்கிறவர்களை நான் அருவருக்காமல் இருப்பேனா?+ 22  அவர்களை அடியோடு வெறுக்கிறேன்.+அவர்கள் எனக்குப் பரம விரோதிகளாக ஆகிவிட்டார்கள். 23  கடவுளே, என்னை ஆராய்ந்து பார்த்து, என் இதயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ என்னைச் சோதித்துப் பார்த்து, என் மனதிலுள்ள கவலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்.+ 24  எனக்குள் தவறான எண்ணம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்.+முடிவில்லாத பாதையில் என்னை வழிநடத்துங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அதை நினைத்தால் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.”
அல்லது, “என்னை நெய்தீர்கள்.”
நே.மொ., “பூமியின் ஆழத்தில்.”
அல்லது, “அவற்றை எண்ணிக்கொண்டுதான் இருப்பேன்.”
வே.வா., “இரத்தப்பழி உள்ளவர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா