நீதிமொழிகள் 15:1-33

15  சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும்.+ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.+   ஞானமுள்ளவர்களின் நாவு அறிவோடு பேசுகிறது.*+ஆனால், முட்டாள்களின் வாய் முட்டாள்தனமாகவே பேசுகிறது.   யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+   சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது.+ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது.   முட்டாள் தன் அப்பாவின் புத்திமதியை அலட்சியம் செய்கிறான்.+ஆனால், சாமர்த்தியசாலி கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறான்.+   நீதிமானின் வீட்டில் ஏராளமான பொக்கிஷம் இருக்கிறது.ஆனால், பொல்லாதவனின் வருமானம் அவனுக்குக் கஷ்டத்தைத்தான் கொடுக்கிறது.+   ஞானியின் உதடுகள் அறிவை வாரி இறைக்கும்.+ஆனால், முட்டாளின் இதயம் அப்படிச் செய்யாது.+   பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+   பொல்லாதவன் போகிற பாதையை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், நீதியை நாடுகிறவனை அவர் நேசிக்கிறார்.+ 10  நேர்வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி கசப்பாக இருக்கிறது.*+ஆனால், கண்டிப்பை வெறுக்கிறவன் உயிரை இழப்பான்.+ 11  யெகோவாவின் கண்கள் கல்லறையையும் புதைகுழியையும்கூட ஊடுருவிப் பார்க்கிறதென்றால்,+ மனிதர்களின் இதயத்தைப் பார்க்காமல் இருக்குமா?+ 12  கேலி செய்கிறவன் தன்னைக் கண்டிப்பவரை வெறுக்கிறான்.+ ஞானமுள்ளவர்களிடம் அவன் ஆலோசனை கேட்க மாட்டான்.+ 13  உள்ளத்தின் மகிழ்ச்சியால் முகம் மலர்ச்சி அடையும்.ஆனால், உள்ளத்தின் வேதனையால் மனம் நொந்துபோகும்.+ 14  புரிந்துகொள்ளும் இதயம் அறிவைத் தேடும்.+ஆனால், முட்டாளின் வாய் முட்டாள்தனத்தை நாடும்.*+ 15  கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான்.+ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு* எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.+ 16  ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+ 17  வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட,*+அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.+ 18  எளிதில் கோபப்படுகிறவன் சண்டையைக் கிளப்புகிறான்.+ஆனால், சீக்கிரத்தில் கோபப்படாதவன் வாக்குவாதத்தைத் தீர்க்கிறான்.+ 19  சோம்பேறியின் வழி முள்வேலியைப் போல் இருக்கிறது.+ஆனால், நேர்மையானவனின் பாதை சீரான நெடுஞ்சாலையைப் போல் இருக்கிறது.+ 20  ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+ஆனால், புத்தியில்லாதவன் தன்னுடைய அம்மாவை அவமதிக்கிறான்.+ 21  புத்தியில்லாதவன் முட்டாள்தனமாக நடப்பதில் சந்தோஷப்படுகிறான்.+ஆனால், பகுத்தறிவு உள்ளவன் நேரான பாதையில் நடக்கிறான்.+ 22  கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்.ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+ 23  சரியான பதிலைச் சொல்கிறவனுக்குச் சந்தோஷம் கிடைக்கும்.+சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!+ 24  வாழ்வின் வழி விவேகமுள்ளவனை முன்னேறிச் செல்ல வைக்கிறது.+அவனைக் கல்லறைக்குப் போகாதபடி காப்பாற்றுகிறது.+ 25  கர்வமுள்ளவர்களின் வீட்டை யெகோவா தரைமட்டமாக்குவார்.+ஆனால், விதவைப் பெண்ணுடைய நிலத்தின் எல்லையைப் பாதுகாப்பார்.+ 26  பொல்லாதவன் போடும் சதித்திட்டங்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவை.+ஆனால், இனிய வார்த்தைகள் அவருக்குப் பிரியமானவை.+ 27  குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் தன் குடும்பத்துக்குப் பிரச்சினையை* கொண்டுவருகிறான்.+ஆனால், லஞ்சத்தை வெறுப்பவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.+ 28  நீதிமானின் இதயம் பதில் சொல்வதற்கு முன்னால் யோசிக்கும்.*+ஆனால், பொல்லாதவனின் வாய் கெட்ட விஷயங்களை உளறிக்கொட்டும். 29  யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+ 30  பிரகாசமான கண்கள்* இதயத்தைப் பூரிப்பாக்கும்.நல்ல செய்தி எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும்.+ 31  உயிர்காக்கும் கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன்,ஞானமுள்ளவர்கள் மத்தியில் குடியிருக்கிறான்.+ 32  புத்திமதியை ஏற்றுக்கொள்ளாதவன் தன் உயிரை அலட்சியப்படுத்துகிறான்.+ஆனால், கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன் புத்தியை* சம்பாதிக்கிறான்.+ 33  யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானமாக நடக்க பயிற்சி அளிக்கும்.+மனத்தாழ்மையாக இருந்தால் மதிப்பு மரியாதை கிடைக்கும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது.”
வே.வா., “கடுமையாகத் தோன்றுகிறது.”
வே.வா., “மேயும்.”
வே.வா., “நல்ல இதயம் உள்ளவனுக்கு.”
வே.வா., “குழப்பமாக.”
நே.மொ., “கொழுத்த காளையைவிட.”
வே.வா., “அவமானத்தை.”
வே.வா., “எப்படிப் பதில் சொல்வதென்று கவனமாகச் சிந்திக்கும்; பேசுவதற்கு முன்னால் யோசிக்கும்.”
வே.வா., “ஒருவரின் சந்தோஷப் பார்வை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா