Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

மத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம்

  • எழுத்தாளர்: மத்தேயு

  • எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்

  • முடிக்கப்பட்ட வருஷம்: ஏறக்குறைய கி.பி. 41

  • காலப்பகுதி: கி.மு. 2-கி.பி. 33

முக்கிய விவரங்கள்:

  • இயேசு இறந்து எட்டே வருஷங்களில், மத்தேயு தன்னுடைய சுவிசேஷப் புத்தகத்தை எபிரெய மொழியில் எழுதியதாக அத்தாட்சி காட்டுகிறது; அவரே அதைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்திருக்கலாம்.

  • மத்தேயு புத்தகம் கிட்டத்தட்ட நூறு தடவை எபிரெய வேதாகமத்தில் இருக்கும் விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அதுவும் 40 தடவை எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டுகிறது.

  • இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவு, முக்கியமாக யூதர்களை மனதில் வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

  • மத்தேயு வரிவசூலிப்பவராக இருந்தார்; பணம், காசு, எண்ணிக்கை, மதிப்பீடு ஆகியவற்றை அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கலாம். (17:27; 26:15; 27:3)

  • பலி மட்டுமல்ல, இரக்கமும் அவசியம் என்று இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியதைப் பற்றி மத்தேயு மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார். (9:9-13; 12:7; 18:21-35)

  • “அரசாங்கம்” என்ற வார்த்தையை மத்தேயு 50 தடவைக்கும் மேலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

  • கடவுளுடைய அரசாங்கத்தை மையமாக வைத்து முதல் 18 அதிகாரங்களை மத்தேயு எழுதியிருக்கிறார்; அதனால், அவற்றிலுள்ள சம்பவங்கள் காலவரிசைப்படி இல்லை. ஆனால், கடைசி பத்து அதிகாரங்களை (19 முதல் 28 அதிகாரங்களை) அவர் பெரும்பாலும் காலவரிசைப்படிதான் பதிவு செய்திருக்கிறார்.

  • மத்தேயுவின் சுவிசேஷப் புத்தகத்திலுள்ள 40 சதவீதத்துக்கும் அதிகமான தகவல்கள் வேறெந்த சுவிசேஷப் புத்தகத்திலும் இல்லை. அவற்றில் குறைந்தபட்சம் பத்து உவமைகள் அடங்கும்: வயலில் களைகள் (13:24-30), புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷம் (13:44), விலை உயர்ந்த முத்து (13:45, 46), இழுவலை (13:47-50), இரக்கம் காட்டாத அடிமை (18:23-35), கூலியாட்களும் தினாரியுவும் (20:1-16), அப்பாவும் இரண்டு பிள்ளைகளும் (21:28-32), ராஜாவின் மகனுடைய திருமணம் (22:1-14), பத்துக் கன்னிப்பெண்கள் (25:1-13), தாலந்துகள் (25:14-30).