காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜனவரி 2017  

பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 2, 2017 வரையுள்ள படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்

வெளிநாட்டில் சேவை செய்த நிறைய சகோதரிகள், அங்கே போவதற்கு ஆரம்பத்தில் தயங்கினார்கள். அவர்கள் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்கள்? வெளிநாட்டில் சேவை செய்ததிலிருந்து அவர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள்?

“யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்”

நம்மால் செய்ய முடியாததை நமக்குச் செய்வதில் யெகோவா சந்தோஷப்படுகிறார். ஆனால், நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். நம்மால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, 2017-ஆம் வருடத்திற்கான வசனம் எப்படி உதவும்?

சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை உயர்வாக மதியுங்கள்!

சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்றால் என்ன? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? சொந்தமாகத் தீர்மானம் எடுக்க, மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

அடக்கம் என்றால் என்ன? அடக்கமாக இருப்பது எப்படி மனதாழ்மையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!

நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது நாம் எப்படி அடக்கமாக இருக்கலாம்? மற்றவர்கள் நம்மை அநியாயமாக நடத்தும்போது அல்லது புகழும்போது நாம் எப்படி அடக்கமாக இருக்கலாம்? சரியான தீர்மானங்கள் எடுக்கும் விஷயத்திலும் நாம் எப்படி அடக்கமாக இருக்கலாம்?

“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”

கூடுதல் பொறுப்புகளை செய்ய இளைஞர்களுக்கு வயதானவர்கள் எப்படி உதவலாம்? பல வருடங்களாக முன்நின்று வழிநடத்துபவர்களை தாங்கள் உயர்வாக மதிக்கிறார்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?

உங்களுக்குத் தெரியுமா?

பைபிள் காலங்களில், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நெருப்பை எப்படிக் கொண்டுபோனார்கள்?