Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கும்ரான்

கும்ரான்

இது சவக் கடலின் வடமேற்குக் கரையிலுள்ள ஒரு காட்டாற்றுப் பள்ளத்தாக்கின், அதாவது ஒரு நீரோடையுடைய அடிப்பரப்பின், பெயர். இதற்குப் பக்கத்தில் இருக்கும் பழங்கால யூதக் குடியிருப்பின் இடிபாடுகளுடைய பெயர்தான் இதற்கும் வைக்கப்பட்டது. சவக் கடல் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு அந்த யூதக் குடியிருப்பு பிரபலமாகிவிட்டது.

இந்தப் பகுதி இப்போது கிர்பெத் கும்ரான் என்று அழைக்கப்படுகிறது. அது எரிகோவுக்குத் தெற்கே 13 கி.மீ. (8 மைல்) தூரத்தில் இருக்கிறது. 1947-ல், அந்தப் பகுதியிலுள்ள குகைகளில் முதன்முதலாக சவக் கடல் சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அநேகமாக, முதல் நூற்றாண்டில் கும்ரானில் குடியிருந்த மக்கள் அவற்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த மக்கள் இஸ்ஸனஸ் என்ற யூதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். கி.பி. 68-ல் ரோமர்கள் படையெடுத்து வந்தபோது அந்த மக்கள் தங்களுடைய முக்கியமான ஆவணங்களைக் குகைகளில் ஒளித்துவைத்துவிட்டுத் தப்பியோடினார்கள். ரோமர்கள் அந்தக் குடியிருப்பை அழித்துவிட்டார்கள். சுமார் கி.பி. 73 வரை அங்கே ஒரு காவல்படையை அவர்கள் நிறுத்தியதாகத் தெரிகிறது.