Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

இவர் எனக்கு பொருத்தமானவரா?

இவர் எனக்கு பொருத்தமானவரா?

 உங்களுக்கு பொருத்தமான ஒரு ஜோடியை கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆனால், அவர் உண்மையிலேயே உங்களுக்கு பொருத்தமானவர்தானா?

 நீங்கள் கல்யாணம் செய்ய நினைப்பவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதற்காக அவள் எப்போதும் நம்பகமானவளாக இருப்பாள் என்று சொல்லிவிட முடியாது. ஊருக்கே தெரிந்திருக்கும் ஒரு பையன் ஒழுக்கமானவனாக இருப்பான் என்றும் சொல்ல முடியாது. அதனால், உங்களுக்கு ஒத்துப்போகும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அவருடைய சுபாவம் உங்கள் சுபாவத்தோடு ஒத்துப்போக வேண்டும். அவர் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறாரோ, அது உங்கள் லட்சியங்களோடு ஒத்துப்போக வேண்டும்.—ஆதியாகமம் 2:18; மத்தேயு 19:4-6.

ஆழம் பார்த்து காலை விடுங்கள்

 அந்த பையனை அல்லது பெண்ணை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்று நேர்மையாக யோசித்துப்பாருங்கள். இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்! ஏனென்றால், உங்களுக்கு எது பிடிக்குமோ அது மட்டுமே உங்களுடைய கண்ணில்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், நன்றாக நேரம் எடுத்து அவருடைய உண்மையான சுபாவத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

 காதலில் விழுகிற நிறைய பேர், பெரும்பாலும் விஷயங்களை மேலோட்டமாக பார்க்கிறார்கள். “எங்கள் இரண்டு பேருக்கும் ஒரேமாதிரியான பாடல்கள் பிடிக்கும்,” “ஒரேமாதிரியான விஷயங்கள் பிடிக்கும்,” “நாங்கள் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகிறோம்” என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், மேலோட்டமாக பார்க்காமல் “இதயத்தில் மறைந்திருக்கிற” குணங்களை பார்ப்பதற்கு நீங்கள் நேரம் எடுக்க வேண்டும். (1 பேதுரு 3:4; எபேசியர் 3:16) உங்கள் இரண்டு பேருக்குள்ளே என்னென்ன விஷயங்கள் ஒத்துப்போகின்றன என்று பார்ப்பதைவிட ஏதாவது ஒரு விஷயம் ஒத்துப்போகாதபோது அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்.

 உதாரணத்துக்கு, இந்த விஷயங்களை யோசித்துப்பாருங்கள்:

  •   ஏதாவது பிரச்சினை வரும்போது அந்த நபர் எப்படி நடந்துகொள்கிறார்? தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல் அவர் இருக்கிறாரா? அவர் ‘கோப வெறியோடு’ நடந்துகொள்கிறாரா? ‘மனதைப் புண்படுத்துவது’ போல் பேசுகிறாரா? (கலாத்தியர் 5:19, 20; கொலோசெயர் 3:8, ஈஸி டு ரீட் வர்ஷன்) அல்லது, அவர் நியாயமாக நடந்துகொள்கிறாரா? ஒரு விஷயம் தவறாக இல்லாத வரைக்கும் சமாதானமாக இருப்பதுதான் முக்கியம் என்று விட்டுக்கொடுத்து போகிறாரா?—யாக்கோபு 3:17.

  •   அந்த நபர் உங்களை கட்டுப்படுத்த நினைக்கிறாரா? அவரை தவிர வேறு யாரிடமும் பேசிப் பழகக்கூடாது என்று சொல்கிறாரா? பொறாமைப்படுகிறாரா? நீங்கள் ஒவ்வொரு நிமிஷமும் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரா? “காதலிக்கிறவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவர் எங்கே போகிறார்... என்ன செய்துகொண்டு இருக்கிறார்... இதைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லவில்லை என்றால் உடனே சண்டை போட்டுக்கொள்வார்கள். இந்த மாதிரி ஒரு உறவு ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்காது” என்று நிக்கோல் சொல்கிறார்.—1 கொரிந்தியர் 13:4.

  •   அவரை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? அவரை ரொம்ப நன்றாக தெரிந்தவர்களிடம், குறிப்பாக சபையில் இருக்கிற அனுபவமுள்ளவர்களிடம், அவரை பற்றி கேட்டு பாருங்கள். அப்படி செய்யும்போது அவரை பற்றி எல்லாரும் ‘உயர்வாகப் பேசுகிறார்களா’ என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.—அப்போஸ்தலர் 16:1, 2.